
கலால் வரிச்சட்டங்களை மீறியமை குறித்து கடந்த வருடத்தில் மாத்திரம் 43 ஆயிரத்து 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலால் வரித்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 252 பேர் பெண்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக உள்ளூர் மற்றும் சர்வதேச மதுபானங்களை உற்பத்தி செய்தமை, தம்வசம் அவற்றை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை மற்றும் கொண்டு சென்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது 180 மில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகை அபராதமாக அறிவிடப்பட்டுள்ளது.
Leave a Reply