குற்றச்செயல்கள் தொடர்பாக தகவல் வழங்க விசேட பொலிஸ் பிரிவு ஸ்தாபிப்பு!

குற்றச்செயல்கள் தொடர்பாக தகவல் வழங்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பாதாள உலகக் குழுக்கள், திட்டமிட்ட குற்றச் செலயல்களில் ஈடுபடுவோர், கப்பம் பெறுவோர், சட்டவிரோதமாகத் துப்பாக்கிகளை வைத்திருப்போர் தொடர்பில் தகவல்களை பெறுவதற்கு விசேட பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் பணிப்புரைக்கு அமைய இந்த விசேட பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விற்பனை, கடத்தல்காரர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பாக சரியான தகவல்களை இந்த விசேட பிரிவிற்கு வழங்க முடியும் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்காக 24 மணித்தியால சேவைக்குரிய தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

011 2580518 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்களை வழங்க முடியும். அல்லது 011 2588499 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாக தகவல்களை வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *