
சுவிஸ் தூதரக பெண் அதிகாரியை கடத்தவில்லை என அரசாங்கமும், பொலிஸாரும் கூறுவது உண்மையென இன்னமும் நம்ப முடியாதுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“இந்த நாட்டில் மீண்டும் வெள்ளை வான் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சுவிஸ் தூதரக பெண் அதிகாரியின் கடத்தல் விடயத்தில் வெள்ளை வான் கடத்தல் இடம்பெறவில்லை, அவர் அச்சுறுத்தப்படவில்லை என அரசாங்கமும் பொலிஸாரும் கூறினாலும் அரசாங்கம் கூறுவது உண்மையென இன்னமும் மனசாட்சிக்கு ஏற்ப நம்ப முடியாது உள்ளது.
அவ்வாறு நடக்கவில்லை என்றால் அதனை நிரூபிக்க அரசாங்கம் சரியான காரணிகளை முன்வைத்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், ஒரு நல்ல வேளையில் இருக்கும் பெண், குடும்பம் பிள்ளைகள் என இருக்கும் பெண் ஒருவர் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட 10 நாட்களில் தனது உயிர், குடும்பம், பிள்ளைகளின் உயிரைக்கூட பொருட்படுத்தாது இவ்வாறான குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைப்பாரா?
அதுவும் இவர்களின் கடந்த கால அரசியல் செயற்பாடுகள் நன்றாக தெரிந்த ஒருவர் அவ்வாறு முறைப்பாடு ஒன்றினை செய்வாரா என சரத் பொன்சேகா சபையில் கேள்வியெழுப்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply