
துமிந்த சில்வாவின் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அலரிமாளிகையில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ரஞ்சன் ராமநாயக்கவிற்கும் குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகரவிற்கும் இடையிலான உரையாடலில் மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவை சிறைக்கு அனுப்புவதே நால்வரது எதிர்பார்ப்பும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் அதிகாரம் முழுமையாக இவரது விடயத்தில் வைராக்கியத்துடன் செயற்படுத்தப்பட்டுள்ளன. பாரத லக்ஷமன் கொலை விவகாரத்தில் பொலிஸ், குற்றப்புலனாய்வு பிரிவினர் சேகரித்த சாட்சியங்கள் மற்றும் விசாரணைகளை மேற்கொண்ட விதம் தொடர்பாக தற்போது பாரிய சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளன.
இவ்விடயம் தொடர்பாக முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும்.
மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவின் வழக்கினை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நீதிமன்றத்தினை அவமதித்த நீதிபதிகளும் முறையான விசாரணைகளுக்கு உட்படுத்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுகின்றோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply