
மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கிய மலையாள இயக்குனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
‘மெமரிஸ்’, ‘பாபநாசம்’ மற்றும் ‘தம்பி’ ஆகிய படங்களில் பிரபல இயக்குனர் ஜீது ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் விவேக் ஆரியன் (30). இவர் இயக்கிய ‘ஒருமையில் ஒரு சிஸ்ரம்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.
டிசம்பர் மாதம் 22ம் திகதியன்று விவேக் தனது மனைவி அமிர்தாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே நாய் ஒன்று குறுக்காக ஓடிவந்துள்ளது.

இதனால் நிலைதடுமாறிய விவேக், மனைவியுடன் தரையில் விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் போராடி வந்த விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Leave a Reply