
இரத்மலானை – தர்மராம பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியின் வீடொன்றிற்குள் புகுந்த அடையாளம் தெரியாதோர், வீட்டிலிருந்த மூவர் மீது கூரான ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இருவரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
Leave a Reply