
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் உள்ள இருதரப்பு பிரச்சினைகள் மற்றும் பிராந்திய கவலைகள் குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று (வியாழக்கிழமை) இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருடன் பேசினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், “அமைச்சர் குணவர்தனவுடன் இருதரப்பு பிரச்சினைகள் மற்றும் பிராந்திய கவலைகள் தொடர்பாக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இந்தியா மற்றும் இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்திய தலைவர்களின் பார்வை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.
Leave a Reply