
வாழைச்சேனையில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று(வியாழக்கிழமை) அதிகாலை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து மண் அகழ்வதற்காக பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாழைச்சேனை வன திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஓட்டமாவடி பகுதியை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Leave a Reply