
மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடந்த 3ஆம் திகதி வரை மட்டக்களப்பில் 216 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு பிரிவில் இதுவரை 32 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேபோன்று ஆரையம்பதியில் 39 பேரும், களுவாஞ்சிகுடியில் 36 பேரும், வாழைச்சேனையில் 30 பேரும், செங்கலடியில் 16 பேரும், காத்தான்குடியில் 15 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் டெங்கு நோய் குறித்து மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Leave a Reply