
மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் போர் ஏற்படும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை தூதுவராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேவையற்ற பயணங்கள், ஒன்றுகூடல்களை தவிர்த்துக் கொள்ளுமாறும், கடவுச்சீட்டை எந்த நேரத்திலும் தயார் நிலையில் வைத்திருக்குமாறும், மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க – ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply