
மத்திய வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்வது குறித்து நாட்டின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.
2020-2021ஆம் நிதியாண்டிற்கான மத்திய வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் 5 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதனால் வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெற வேண்டிய பொருளாதார வளர்ச்சிக்கான அம்சங்கள் குறித்து பொருளாதார நிபுணர்களுடன், மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.
பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் வரிச்சலுகை அறிவிப்புக்கள், உட்கட்டமைப்பிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகியன இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2019-2020 நிதியாண்டில் நாட்டின் ஜி.டி.பி. 5 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதுடன், மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையிலும் வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்க பிரதமர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் வரவு செலவுத் திட்ட தயாரிப்பிற்காக மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என பிரதமர் நேற்று அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply