
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை மதிப்பீட்டு நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக 27 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று பாடசாலைகள் இந்த காலப்பகுதியில் முழுமையாக மூடப்படவுள்ளன.
மாத்தறை – மஹாமாயா மகளிர் பாடசாலை, கண்டி புனித அந்தோனியார் மகளிர் கல்லூரி மற்றும் குருணாகல் – மல்லவபிட்டிய C.W.W. கன்னங்கர பாடசாலை ஆகியன முழுமையாக மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஏனைய 24 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆலோசனைகள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Leave a Reply