
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான 20 க்கு 20 போட்டியில், உபாதை காரணமாக இசுறு உதான இலங்கை அணியில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் இந்தூரில் இடம்பெற்ற இரண்டாவது 20 க்கு 20 போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டபோது இசுறு உதான உபாதைக்கு உள்ளானார்.
இந்த நிலையில், அவர் இறுதிப் போட்டியில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடரின் முதலாவது போட்டி சீரற்ற வானிலை காரணமாக கைவிடப்பட்டது.
இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 1 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டி நாளைய தினம் இடம்பெறவுள்ளது.
Leave a Reply