
இந்த ஆண்டின் இறுதிக்குள் ‘Gamata Geyak Ratata Hetak’ என்ற திட்டத்தின் கீழ் 14,022 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த வீட்டுத் திட்டம் தொடர்பாக பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த முன்மொழிவுக்கே அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே இந்த விடயம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தலா 600,000 ரூபாய் செலவில் 14,022 வீடுகள் நிர்ணமானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply