
இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடியில் சிக்கியுள்ள அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பில் சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் காசிவிசுவநாதன் சண்முகத்துடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை அரசாங்கத்தின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அர்ஜூன் மகேந்திரனை ஒப்படைப்பது தொடர்பில் இலங்கைக்கு வருகை தந்த சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் காசிவிசுவநாதன் சண்முகத்துடன் வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்றையதினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கெஹேலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
Leave a Reply