இலங்கையர்கள் ஒரே நாளில் கடவுச்சீட்டு எடுக்க வேண்டுமா? உடனே இதை பகிருங்கள்

கொழும்பு – பத்திரமுல்லவுக்கு சென்றால் ஒரே நாளில் கடவுச்சீட்டு எடுக்கலாம். வவுனியா போன்ற பிராந்திய நிலையங்களில் ஒரே நாளில் எடுக்க முடியாது.

எனினும், வவுனியாவில் கடவுச்சீட்டு வழங்கும் பிராந்திய அலுவலகத்தில் சென்று கடவுச் சீட்டினை பெற்று கொள்ள விரும்பவர்களுக்கு இந்த தகவல் பயனுடையதாக இருக்கும்.

 • பாஸ்போட் அலுவலகம் வவுனியா புகையிரத நிலையத்திற்க்கு மிக அண்மையில் உள்ளது.
 • காலை 8.30 மணிக்கு நிற்கக் கூடியதாகச் செல்லுங்கள். பிற்பகல் 1.30 மணி வரை விண்ணப்பங்களைக் கொடுக்க முடியும்.
 • பாஸ்போட் அலுவலகத்திற்கு உள்ளே போக முதலே தங்களது ஸ்ரூடியோவில் புகைப்படம் எடுக்கலாம். தாங்களே நிரப்பித்தருவோம் என புரோக்கர்கள் வருவார்கள். அவர்களிடம் செல்ல வேண்டாம். தேவையான போட்டோ பிரதிகளையும் அங்கு எடுக்கலாம்.
 • நேரடியாக அலுவலகம் செல்லுங்கள்.
 • தேவையான ஆவணங்களைச் சரியாகக் கொண்டு செல்லுங்கள். பிறப்பு, விவாகச் சான்றிதழ்கள் ஆயின் 6 மாத காலத்திற்கு உட்பட்டதாகப் பெற்றிருத்தல் வேண்டும். பெற்றோர் கடவுச்சீட்டு வைத்திருப்பின் கட்டாயமாக எடுத்துச் செல்லுங்கள். உங்களை அடையாளப்படுத்த தேசிய அடையாள அட்டை, அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இவற்றில் ஒன்று கட்டாயம் தேவை.
 • சான்றிதழ்கள் தமிழில் இருந்தாலே போதுமானது. ஆங்கில மொழி பெயர்ப்புத் தேவையில்லை.
 • அங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக கடமையாற்றுபவர்கள் உங்களுக்குச் சரியான வழிகாட்டுதலைச் செய்வார்கள்.
 • சென்ற உடன் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் இலக்க ரோக்கனை உடனேயே வாங்கி விடுங்கள். தமிழில் யாவரும் யாவும் கதைக்கலாம்.
 • அவரிடமே கடவுச்சீட்டு புதுப்பிக்கும் படிவத்தை வாங்குங்கள். அங்குள்ள உத்தியோகத்தர்கள் அல்லது ஆங்கிலம் தெரிந்த அங்கு வரும் பொதுமக்கள் படிவத்தைப் பூரணப்படுத்தித் தருவார்கள்.
 • புகைப்படத்தை அங்கேயே எடுங்கள். 250 ரூபா எடுப்பார்கள். அதன் பின்பு ஒன்றைத் தருவார்கள். அதனை விண்ணப்பப் படிவத்துடன் கொடுங்கள்.
 • விண்ணப்பத்தில் ” சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டு – All Countries ) எனும் பெட்டியினுள் சரி போடுங்கள்.3500 ரூபா கட்டணம். 01.01.2019 முதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுமான கடவுச்சீட்டு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
 • ஆனால் விண்ணப்பத்தை உள்ளே சென்று கொடுக்கும் போது அங்குள்ள அலுவலர் எங்கே போவதற்குப் கடவுச்சீட்டு எடுக்கிறீர்கள் எனக் கேட்பார். இந்தியா போவதற்கு எனச் சொன்னவர்களுக்கு India Only என கடவுச்சீட்டில் அடித்து ஒரு வாரத்தினுள் விநியோகித்து இருக்கிறார்கள். 7 நாள்களுள் கடவுச்சீட்டு வந்துள்ளது.
 • அவ்வாறு பாஸ்போட்டைப் பெற்றவர்கள் திரும்பவும் சென்று All Countries என மாற்ற அலைந்துள்ளார்கள்.
 • ஆகவே நீங்கள் கனடா போவதோ, சுவிஸ் போவதோ உங்களது சொந்த விடயம். ஆகவே அவர் கேட்டால் அவுஸ்திரேலியா, கனடா, சுவிஸ், பிரான்ஸ், நோர்வே போல ஒரு நாட்டைச் சொல்லுங்கள்.
 • அவ்வாறு சொன்னால் பாஸ்போட் 14 முதல் 21 நாள்களுக்குள் உங்களது வீட்டிற்கு வந்து விடுகிறது.
 • நீங்கள் ஒரே நாளில் கடவுச்சீட்டை எடுப்பதானால் கொழும்பு , பத்திரமுல்லவுக்குத் தான் செல்ல வேண்டும்.
 • வவுனியா போன்ற பிராந்திய நிலையங்களில் எடுக்க முடியாது.
 • வவுனியாவில் அலுவல் பார்த்து ஒரே நாளில் கடவுச்சீட்டு எடுத்து தருகிறேன். 10 000 ரூபா தருகிறீர்களா? எனச் சில ஏமாற்றுப் பேர்வழிகள் உத்தியோகத்தர் போல ரிப்ரொப்பாக அந்த அலுவலகத்தினுள் ஆள்களிடம் பேச்சுக் கொடுக்கின்றனர். ஏமாந்து விடவேண்டாம்.
 • பதினெட்டு வயதுக்கு உட்பட்ட பிள்ளையின் கடவுச்சீட்டை புதுப்பிப்பதாயின் தாய், தந்தை கட்டாயம் நேரில் செல்ல வேண்டும். பிள்ளையையும் அழைத்துச் செல்ல வேண்டும்.

இலங்கைக் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் இணையத்தள முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *