
ஈரானில் நடந்த விமான விபத்து தொடர்பான விசாரணையில் தாங்களும் கலந்து கொள்ளவிருப்பதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
ஈரான் தலைநகர் Tehran-ல் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் கிளம்பிய பயணிகள் விமானம் வெடித்து சிதறியதில் உள்ளிருந்த 176 பயணிகளும் உயிரிழந்தனர்.
இது தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்த விபத்து என ஈரான் கூறியது.
ஆனால் கனடா உள்ளிட்ட சில நாடுகள், ஏவுகணை தாக்கி தான் விமானம் வீழ்த்தப்பட்டது என கூறியுள்ளது.
இது தொடர்பான விசாரணையை ஈரான் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த விடயத்தில் புதிய வரவாக பிரான்ஸ் நுழைந்துள்ளது.
பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஈரானில் நடந்த உக்ரைன் விமான விபத்து தொடர்பான விசாரணையில் தாங்கள் பங்கேற்போம் என அறிவித்துள்ளது.
ஆனால் பிரான்ஸ் இந்த விடயத்தில் நுழைவதை ஈரான் ஏற்று கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Leave a Reply