
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு எதிர்வரும் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை) காலை முதல் ஜல்லிக்கட்டு வீரர்கள் வரிசையில் காத்திருந்து முன்பதிவு செய்துவருகின்றனர்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்க வயது வரம்பு 18 என்று இருந்த நிலையில் இந்தாண்டு 21 வயது என புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 15, 16, 17 ஆகிய 3 தினங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கால்நடை மருத்துவர்கள் மாடுகளை சோதனையிட்டு எந்த வித நோய்களும் இல்லை என்பதற்கான சான்றிதல்களையும் வழங்கி வருகின்றனர்.
அதேபோல் மாடுபிடி வீரர்களையும், போட்டிக்கு தகுதியானவர்களா என்று சோதனை நடத்தப்பட்ட பின்னரே வாடிவாசல் மைதானத்திற்குள் அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply