
தாய்வானில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி சாய் இங்-வென் மீண்டும் வெற்றிபெற்று ஜனாதிபதியாகுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.
நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, நாட்டு மக்களிடே மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
நாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் 113 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் தாய்வானின் முதல் பெண் ஜனாதிபதியான சாய் இங்-வென் மீண்டும் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை இந்த தேர்தலில் சீனாவின் தலையீடு இருக்கும் என பரவலாக பேசப்படுகின்றது.
கடந்த ஆண்டு ஓரின சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய முதல் ஆசிய சமுதாயமாக தாய்வான் பார்க்கப்பட்ட போது, தற்போதைய ஜனாதிபதி சாய் இங்-வென் உலகளவில் பிரபலமானார். எனினும், தாய்வானின் பெரும்பான்மையான மக்கள் இதனை விமர்சித்ததாக கூறப்படுகின்றது.
இதேவேளை முன்னதாக, பசுமை ஆற்றலை மேம்படுத்துவதன் மூலம் மின்சார பற்றாக்குறையை ஏற்படுத்தியதாகவும், அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்க முயன்றபோது, தொழிலாளர் வருவாய் மற்றும் விடுமுறையை அதிகரிப்பதை விட காயப்படுத்தியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
எனினும், வாக்களிக்க தகுதியுள்ள சுமார் 19 மில்லியன் மக்களிடையே சாய் இங்-வென்னுக்கு அதிக நன்மதிப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.
Leave a Reply