
ஜப்பானில் நிதி முறைகேடு வழக்குகளை எதிர்கொண்டுள்ள நிஸான் வாகன உற்பத்தி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கார்லோஸ் கோசன், தங்கள் நாட்டை விட்டு வெளியேற லெபனான் தடை விதித்துள்ளது.
ஜப்பானிலிருந்து கடந்த மாதம் லெபனானிற்குள் இரகசியமாக தப்பி வந்துள்ள அவரை,இன்டர்போல் பொலிஸார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
எனவே, கோசன் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக என லெபனான் நீதித் துறை விளக்கம் அளித்துள்ளது.
லெபானுக்குத் தப்பிச் சென்றுள்ள அவர் அதன் பிறகு முதல் முறையாக தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன் தினம் (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த கார்லோஸ் கோசன், தன் மீது குற்றமில்லை என்பதை நிரூபிக்கப்போவதாகவும், தனக்கு எதிராக ஜப்பான் அரசு வழக்குரைஞ்கள் சதித் திட்டம் தீட்டுவதாகவும் கூறியிருந்தார்.
ஜப்பானைச் சேர்ந்த நிஸான் கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் 65 வயதான கார்லோஸ் கோஸ்ன்.
இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெனால்ட், ஜப்பானைச் சேர்ந்தச் மிட்சுபிஷி ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்களின் தலைவர் பொறுப்பிலும் உள்ளார்.
குறிப்பாக நஷ்டத்தில் சென்றுக்கொண்டிருந்த நிஸான் நிறுவனத்தை வாகன சந்தையில் முக்கிய இடத்துக்கு உயர்த்தியவர் கார்லோஸ் கோஸ்ன்.
இந்நிலையில் இவர் மீதும், நிஸான் இயக்குனர் குழு உறுப்பினர் கிரேக் கெல்லி என்பவர் மீதும் நிதி முறைகேடு புகார் வைக்கப்பட்டது.
தங்களது வருவாயை குறைத்து காண்பித்தது, நிறுவனத்தின் சொத்துகளை சுயதேவைக்கு பயன்படுத்தியது, நிஸான் பங்குதாரர்களிடம் தவறான தகவல் அளித்து அவர் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்தது உள்ளிட்ட நிதி முறைகேட்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நிஸான் மோட்டார் நிறுவனத்தின் தலைவராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த கார்லோஸ் கோஸ்ன், கடந்த 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இதன்பிறகு நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவரை பிணையில் விடுவித்த ஜப்பான் நீதிமன்றம், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அவரை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
ஆனால், ஜப்பானில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட கோன், இரகசியமாக லெபனானிற்கு தப்பி சென்று விட்டார்.
ஆனால் ஜப்பானில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட கோன் எப்படி அங்கிருந்து தப்பினார் என்பது இதுவரை தெரியவில்லை. பிணையில் விடுவிக்கப்பட்ட, குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் தப்பிச் செல்வதை நியாயப்படுத்த முடியாது என்று ஜப்பான் கூறியுள்ளது.
பிரான்ஸ் மற்றும் லெபனானைப் பூர்விகமாகக் கொண்ட பெற்றோருக்கு பிரேஸிலில் பிறந்த கார்லோஸ் கோசன், பிரான்ஸ், லெபனான், பிரேசில் ஆகிய 3 நாடுகளிலும் குடியுரிமை பெற்றுள்ளார்.
இதற்கிடையில் கார்லோஸ் கோசன் தங்கள் நாட்டுக்கு வந்தால், அவரை ஜப்பானுக்கு அனுப்பப் போவதில்லை என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
Leave a Reply