
வட மாகாணத்தை சேர்ந்த 2000 பேரை பொலிஸ் திணைக்களத்தில் உள்வாங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார்.
சமகால அரசாங்கத்தின் கொள்கை திட்டத்திற்கு அமைய வட மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இரண்டாயிரம் பேரில் 200 உப பொலிஸ் அதிகாரிகளும் 1400 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் அடங்குவதாக, பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தெரிவு செய்யப்படவுள்ளவர்களுக்கு வட மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்கள் ஊடாக பயிற்சி வழங்கப்படவுள்ளன.
Leave a Reply