
பெங்களூர் விமானநிலையத்தில் பனி படந்திருந்ததால் புல்வெளியில் தரையிறக்கிய விமானிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
GoAir A-320 NEO என்ற பயணிகள் விமானம் 146 பயணிகளுடன் பெங்களூர்க்கு வந்துள்ளது. அப்போது, 50அடி உயரத்தில் இருக்கையில், பனி படந்து கீழே தெரியாத வகைளில் இருந்துள்ளது. ஆனால், இதை கவனித்த விமானிகள் இருவரும் இது பற்றி விமான அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை.
விமான தள இயக்குநர் இது குறித்து தெரிவிக்கையில் “விமானிகள் தரையை பார்க்கு அளவில்லை இல்லாமல் பனி படந்துள்ளது. இது குறித்து அவர்கள், எங்களிடம் பகிராதது மிகவும் தவறு. அவர்களுக்க சரியாக தெரியாததால் ரன்வே-ல் இருந்து விமானத்தை தவறான பாதையில் செலுத்தி புல்வெளியில் தரையிறக்கினர்.
இதையும் கவனித்த துணை விமானியும் அறிவுறுத்தவில்லை. வெளிப்படையாக கூறவேண்டுமானால், இருவரும் அறிவுறுத்த தவறிவிட்டனர். எனவே விமானிக்கு 6மாதங்கள் தடையும், துணை விமானிக்கு 3மாதங்கள் தடையும் விதிப்பதாக” அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வீடியோ மற்றும் புகைப்பட வீமானத்தில் பயணம் செய்த நபர்களால், எடுக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது.
Leave a Reply