
வெளிநாட்டில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றிதிரியும் தன் கணவரை காப்பாற்றுமாறு தமிழகப்பெண் கதறி அழுதபடி கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தின் காரைக்குடியை சேர்ந்த சுரேஷ் என்பவர் குடும்ப சூழல் மற்றும் வறுமை காரணமாக துபாய்க்கு கொத்தனார் வேலைக்கு சென்றுள்ளார்.
ஆனால் அங்கு சொன்ன வேலை கொடுக்காமல் வேறு வேலை கொடுத்து துன்புறுத்தியதாகவும் அதனால் நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தனது மனைவிக்கு சுரேஷ் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில், தன்னை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுரேஷ் கண்ணீர் மல்க வலியுறுத்தியுள்ளார்
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கவிதா உடனடியாக சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கதறி அழுதபடி ஒரு மனு அளித்தார்.
அதில், தன் கணவரை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கும்படி கண்ணீர் மல்க, தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Leave a Reply