இலங்கையில் உள்ள வங்கி ஒன்றில் கனடா தமிழரிற்கு நேர்ந்த கதி? பின்னர் கிடைக்கும் பல இலட்சம் டொலர்

கனடாவில் வசிக்கும் இலங்கை வெளிநாட்டவர் ஒருவருக்கு டொலர் 875,000யை செலுத்துமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ஏனெனில் அவரது வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்மை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இலங்கை வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட 93 குற்றங்களை சுட்டிக்காட்டி 50 பக்கங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தெரிய வருவதாவது..

இவ்வாறு முறைகேடாக பணம் பயன்படுத்தப்பட்டது இலங்கை வங்கியின் விசேட முதலீட்டு வைப்புக் கணக்கில் (SFIDA). இந்த கணக்குகள் மூன்றும் அவரினால் 2012ம் ஆண்டு திறக்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கியினால் அவருக்கு இணையதள வங்கி முறையை பயன்படுத்த வழங்கப்பட்ட போதிலும், 2013ம் ஆண்டின் பின் அவரின் கணக்குகளுக்கான இணையத்தினுடனான அணுகல் தடுக்கப்பட்டது.

சில மாதங்களாக வங்கி அவருக்கு புதிய கடவுச்சொல்லைக் கொடுத்ததுடன், புதிய கடவுச்சொல்லுடன் அவர் தனது வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்கும்போது, முந்தைய 3 கணக்குகளில் 2 இன் இருப்பு தவறானது என்பதைக் காணக்கூடியதாக இருந்துள்ளது.

அந்த நிலையான வைப்புக் கணக்குகள் இரண்டும் காணாமல் போயிருப்பதை 2014 ஜனவரி 31ம் திகதி அவருக்கு காணக்கூடியதாக இருந்துள்ளது.

அதற்கான காரணத்தை கேட்ட போது ” உங்களின் வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்க டொலர் 750,000யை உங்கள் அமெரிக்க கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது.

34,467,825/- ரூபாய் தென் ஆபிரிக்காவில் உள்ள உங்களின் கணக்குக்கு அனுப்புமாறு நீங்க எங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளீர்கள்” என குறிப்பிட்டு மின்னஞ்சல் ஒன்று இலங்கை வங்கியினால் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதாவது உங்கள் இரு கணக்குகளும் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. உங்களிடம் இப்போது SFIDA S / A கணக்குகள் மட்டுமே உள்ளன.

இதனால்தான் 2 கணக்குகள் வங்கி அமைப்பில் உங்களுக்கு காட்டப்படவில்லை.” என மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் கணக்கு வைத்திருப்பவர் அத்தகைய இடமாற்றங்களை செய்யுமாறு ஒருபோதும் அறிவிக்கவில்லை.

அவரது மற்ற கணக்குகளுக்கு அத்தகைய இடமாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. அலட்சியம் காரணமாக வேறொருவரின் கணக்கில் பணத்தை மாற்றியதாக வங்கி பின்னர் அறிவித்துள்ளது.

பணத்திற்கு கூடுதலாக வட்டி செலுத்த வேண்டும்!

இதற்கமைய குறித்த தமிழர் வங்கிக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றார், மேலும் அவர் கோரிய 750,000 டொலர் இழப்பீட்டுத் தொகைக்கு கூடுதலாக 125,476.75 டாலர் சட்ட வட்டி செலுத்தவும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த சட்ட வட்டி, முந்தைய 750,000 டொலர் அவரது கணக்கில் இருந்தால், அவருக்கு வங்கியினால் செலுத்தும் வட்டி இதுவாகும்.

இலங்கை வங்கிக்காக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகள் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வாவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *