
ஈரான் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொல்வதற்கு உதவிய நபர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 3-ஆம் தேதி ஈரான் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தின் அருகே, ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில், ஈரானின் புரட்சிகர தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.
இறப்பதற்கு முன்னர் இவர், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் இருந்து சாம் விங்ஸ் நிறுவன பயணிகள் விமானத்தில் புறப்பட்டு, பாக்தாத் வந்திறங்கியுள்ளார்.
இந்த இரு இடங்களில் இருந்து இன்பார்மர்கள்(தகவல் கொடுப்பவர்கள்) அமெரிக்காவுக்கு அளித்த தகவலே சுலைமானியை கொலை வீழ்த்துவதற்கு உதவியாக இருந்துள்ளது.

பாக்தாத் விமான நிலைய ஊழியர்கள் 2 பேர், பொலிஸ் அதிகாரிகள் 2 பேர், சாம் விங்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் 2 பேர் என 6 பேரை ஈராக் விசாரணை அதிகாரிகள் சந்தேகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை வளையத்தில் உள்ள 2 விமான நிறுவன ஊழியர்களில் ஒருவர் உளவாளி என்றும், மற்றொருவர் விமான பணிக்குழுவை சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Leave a Reply