
அரசியல் நலனுக்காக எவரும் குரல் பதிவுகளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளமையினால் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து குரல் பதிவுகளையும் இணையத்தில் வெளியிடுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது.
பத்தரமுல்லையில் ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன்போது அதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வெளியாகியுள்ள குரல் பதிவுகளில் பல்வேறு தரப்பினர் சம்மந்தப்பட்டுள்ளதை மக்கள் தற்போது நன்கு அறிவார்கள்.
எனினும் குறித்த குரல் பதிவுகளை சிலர் தங்களது அரசியல் நலன்களுக்கு பயன்படுத்தி கொள்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து குரல் பதிவுகளையும் மக்கள் அறிந்துகொள்ளும் விதமாக இணையத்தில் பதிவேற்றுவதே சிறந்தது.
அதாவது ரஞ்சன் ராமநாயக்கவின் ஒரு இலட்சத்து 21ஆயிரத்துக்கும் அதிகமாக குரல் பதிவுகள் வேறு தரப்புகளுக்கு கிடைக்கப் பெற்றால் அதனை தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
ஆகவே இந்த விடயத்தில் அவர் உரிய வகையில் செயற்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply