
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட காலமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மஹிந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டார். இதன் போது அவர் 423,529 வாக்குகளை பெற்றிருந்தார்.
இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கம்பஹா மாவட்ட தலைவர் பிரசன்ன ரணதுங்க ,கம்பஹா மாவட்டத்தில் 425,000 அதிகமான வாக்குகள் பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அவர் 384,448 வாக்குகளை அவர் பெற்றுள்ளார்.
அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டில் அதிக வாக்குகளை பெறுவதற்காக மஹிந்த ராஜபக்ஷ இம்முறை கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
1994ஆம் ஆண்டு கம்பஹா மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 464,588 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார். அந்த சாதனையை முறியடிக்க மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரையில் அதிக வாக்குகளை 2015ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 500,566 வாக்குகளை அவர் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply