
பொறியியலாளராக வரவேண்டும் என்ற கனவுடன் 13 வயதிலேயே மாற்றுத் திறனாளிகளுக்காக சூரிய சக்தியில் இயங்கும் முச்சக்கர வண்டியை கிளிநொச்சி மாணவன் வடிவமைத்துள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் பலரை அவதானித்த இச்சிறுவன் எரிபொருள் பயன்பாடற்ற சூரிய சக்தியில் இயங்கக் கூடியவாறான முச்சக்கர வண்டியினை வடிவமைத்துள்ளார்.
கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் பிரணவன் என்ற இந்த மாணவன், தான் ஒரு பொறியியலாளராக வரவேண்டும் என்பதே இலக்காக கொண்டுள்ளதாக கூறுகிறார்.
சிறு வயதிலேயே இவ்வாறான வடிவமைப்புக்கள் மீது ஆர்வம் கொண்ட குறித்த மாணவன் பல்வேறு அறிவாற்றலைக் கொண்டுள்ளதாக சிறுவனின் பேரனார் தெரிவித்துள்ளார்.
யூ-ரியூப்பில் ரொட்டி தயாரிக்கும் முறையை நேற்று (வெள்ளிக்கிழமை) பார்த்த குறித்த சிறுவன், பலகை மூலமாக உடனடியாக ஓர் வடிவமைப்பினை மேற்கொண்டு உடனடியாக பயன்படுத்தும் வகையில் பெற்றோரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கின்றார் சிறுவனின் பேரனார்.
இவ்வாறு திறமைகொண்ட குறித்த மாணவன் துவிச்சக்கர வண்டியில் இவ்வாறு வெடிவமைப்பினை மேற்கொண்டு பயன்படுத்தி வந்த நிலையில் மாற்றுதிறனாளிகளிற்காக இவ்வாறானதொரு வடிவமைப்பினை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தகூடிய மோட்டர் கிடைக்குமானால் அதனை மேலும் வலுச்சேர்க்க முடியும் எனவும் தெரிவிக்கின்றார். இவ்வாவாறான வடிவமைப்பிற்காக தனக்கு 12 மாதங்கள் தேவைப்பட்டதாகவும். இதனை பிரதி செய்வதற்கு 6 மாதங்கள் தனக்கு போதுமானதாகவும் தெரிவிக்கின்றார்.
இதேவேளை 70ஆயிரம் ரூபாவில் இவ்வாறான வசதிகொண்ட முச்சக்கர வண்டி ஒன்றை திறண்பட வடிவமைக்க முடியும் எனவும் அம்மாணவன் தெரிவிக்கின்றார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்ாறான மாணவர்களின் ஆற்றல்கள் படிப்படியாக வெளிக்கொண்டு வரப்படுகின்றமை குறிப்பிடதக்கதாகும்.







Leave a Reply