
தாய்வான் பொதுத் தேர்தல் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் 113 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக முன்னேற்ற கட்சியின் முக்கிய தலைவரும், தற்போதைய ஜனாதிபதியுமான சாய் இங்-வென் இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவியை பிடிக்க களத்தில் இறங்கி உள்ளார்.
அவருக்கு எதிராக சீனா ஆதரவு கட்சியான கொமிந்தாங் கட்சியின் ஹான் கோயு, பீப்பிள் பர்ஸ்ட் கட்சியின் ஜேம்ஸ் சூங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதில் தாய்வானின் முதல் பெண் ஜனாதிபதியான சாய் இங்-வென் மீண்டும் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த தேர்தலில் 19.3 மில்லியன் மக்கள் வாக்களிக்கும் தகுதியினை கொண்டுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
Leave a Reply