
பாகிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், 15பேர் உயிரிழந்துள்ளதோடு 20இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொழுகையின் போது, இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.
காயமடைந்தவர்களில் பல பேரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்க கூடுமென அஞ்சப்படுகின்றது.
இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒரு பொலிஸ் அதிகாரி அடங்குவதாகவும், பெரும்பாலும் இதன்போதே பொதுமக்களே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை குண்டுதாரி மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, இத்தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு பயங்கரவாத குழு பொறுப்பேற்றுக்கொண்டது.
எனினும், ஜிஹாதி அச்சுறுத்தல்களின் எச்சரிக்கைகள் மற்றும் மொழிபெயர்ப்புகளை வழங்கும் சைட் புலனாய்வுக் குழுவின் கூற்றுப்படி, குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மசூதியில் அப்பாவி மக்களை தாக்கியவர்கள் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது’ என பாகிஸ்தான் இராணுவ தலைவர் கமர் ஜாவித் பாஜ்வா தெரிவித்துள்ளார்.
Leave a Reply