
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி இந்த அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.
கட்சித் தலைமைப் பதவி தொடர்பில் ரணில் விக்ரமசிங்க உரிய தீர்வுத் திட்டத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் புதிய கட்சியொன்றை உருவாக்குவதற்கு சஜித் தரப்பு அண்மையில் தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் கடந்த 9ம் திகதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடிய போதிலும் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.
தாம் வெளிநாடு செல்வதாகவும் எதிர்வரும் வியாழக்கிழமை வாக்கெடுப்பு மூலம் கட்சித் தலைமைப் பதவி குறித்து தீர்மானிக்க முடியும் எனவும் ரணில் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்திருந்தார்.
எனினும், இவ்வாறு தலைமைத்துவம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதில் தொடர்ந்தும் காலத்தை விரயமாக்குவதனை விடவும் புதிய கட்சி ஆரம்பிப்பது பொருத்தமானது என சஜித் தரப்பினர் தீர்மானித்துள்ளதாக தெற்கு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
Leave a Reply