மகளின் தற்கொலையால் தீ மூட்டிய தாயும் மரணம்

அண்மையில் யாழ்ப்பாணம் – கொக்குவில், அரசடி பகுதியில் தீக்காயத்துக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் பயின்ற மகேஸ்வரன் கஜானி (17-வயது) என்ற மாணவி கடந்த 8ம் திகதி தற்கொலை செய்திருந்தார்.

இந்நிலையில் பிறிதொரு இடத்துக்கு சென்று திரும்பிய குறித்த மாணவியின் தாய் அன்றைய தினம் மகளின் சடலத்தை அகற்றுவதற்கு முன்னதாக பொலிஸாரின் விசாரணை இடம்பெற்ற போதே தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து தாயாரையும் தற்கொலை செய்த மகளின் சடலத்தையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த தாயார் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *