
யாழ்ப்பாணம் – மானிப்பாய், உடுவில் பகுதியில் இராணுவம், மற்றும் பொலிஸார் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதனால் அப்பகுதி மக்களிடயே பதட்டம் தோன்றியதாக தெரியவருகின்றது.
அதிகாலை வேளை இராணுவ வாகனங்களில் வந்து இறங்கிய படையினர் வீடு வீடாக சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதன்போது “தேடப்படும் நபர்கள் யாராவது உள்ளனரா” என தாம் தேடிவருவதாக வீட்டு உரிமையாளர்கள் சிலரிடம் இராணுவத்தினர் தெரிவித்துள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
அத்துடன் படையினர் வீதியால் சென்றவர்களையும் மறித்து சோதனை செய்யப்பட்டே பின்னரே அவர்கள் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை இராணுவத்தினரின் இந்த திடீர் சோதனை நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Leave a Reply