
நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது எனவும், இதனை தீர்ப்பதற்கு முதலில் வருமான வரியை ஒழிக்க வேண்டும்’எனவும் பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நாட்டின் பொருளாதாரம் பாதாளத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது. இது தொடருமேயானால் வங்கிகளும், பிற நிதி நிறுவனங்களும் மூடப்பட வேண்டியதாகிவிடும். இதனால் பேரிழப்பு ஏற்படும். பொருளாதாரத்தை மீட்டெடுக்க சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அதற்கு முதலில் வருமான வரியை முற்றிலும் நீக்க வேண்டும். ‘வரி பயங்கரவாதம்’ நாட்டிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். 6 வழி மற்றும் 8 வழிச் சாலைகளை மத்திய அரசு அமைக்க வேண்டும்” என தெரிவித்தார்.
Leave a Reply