
அவுஸ்ரேலிய காட்டுத்தீ தொடர்பாக உயர் அதிகாரம் கொண்ட விசாரணையை ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியாவைத் தாக்கும் காட்டுத்தீயைக் கையாள்வது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என பல்வேறு விமர்சனங்கள் கடந்த காலங்களில் எழுந்த நிலையில் அவர் இந்த அறிவிப்பிங் விடுத்துள்ளார்.
கடந்தமூன்று மாதங்களாக உக்கிரமடைந்த காட்டுத்தீ காரணமாக 28 பேர் உயிரிழந்ததுடன் 2,000 வீடுகள் முற்றாக சேதமடைந்தது மில்லியன் கணக்கான ஏக்கர் நிலம் மற்றும் வனவிலங்குகள் அழிவடைந்துள்ளன.
இந்த சம்பவம் ஒரு அரசியல் ரீதியாக பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகிவரும் நிலையில், தீயைக் கையாள்வது குறித்து றோயல் கமிஷன் என அழைக்கப்படும் ஒரு உயர் அதிகாரம் கொண்ட நீதி விசாரணையை முன்மொழியப்போவதாக மொரிசன் கூறினார்.
இதுகுறித்து அரச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் மொரிசன், “அது அவசியம் என்று நான் நினைக்கிறேன், அந்த நோக்கத்திற்காக நான் அமைச்சரவை மூலம் ஒரு திட்டத்தை எடுத்துக்கொள்ளுவேன், ஆனால் அந்த விசாரணைக்குழு மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களுடன் கலந்தாலோசித்து செய்யப்பட வேண்டும்” என கூறினார்.
Leave a Reply