
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்திய தேடுதலில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
நேற்றையதினம் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மேற்படி இருவரும் 85 மில்லி கிராம் போதைப்பொருளை தமது உடமையில் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரில் ஒருவர் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மற்றயவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply