
சூர்யா நடித்த மவுனம் பேசியதே படத்தில் நடித்திருந்தவர் நேஹா பெண்ட்சே. பின் இனிது இனிது காதல் இனிது படத்தில் நடித்திருந்தார். மலையாளம், ஹிந்தி, கன்னட சினிமாவிலும் நடித்து வந்தார்.
அண்மையில் இவர் தொழிலதிபர் ஷர்துல் ஃபயஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஷர்துல்லுக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்தானவர். அவருக்கு 2 குழந்தைகளும் இருக்கின்றன.
இந்நிலையில் நேஹா அவரை மூன்றாம் திருமணம் செய்தது ஏன் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வர அவர் எதுவும் பதில் சொல்லாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது கோபமாகி உலகத்தில் எங்கும் நடக்காமல், நான் மட்டுமே இப்படி ஒருத்தருக்கு மூன்றாம் தாரமாக போனதாக சொல்கிறார்கள். 4 திருமணம் செய்வதெல்லாம் இப்போது வழக்கமாகிவிட்டது. வாழ்க்கைக்காகத்தான் இப்படி முடிவுகள் எடுக்கிறார்கள். ஏதோ மிகப்பெரிய தவறு செய்ததது போல பேசுவது சரியானது கிடையாது.
ஒரு ஆண் இரண்டு பெண்களோடு உறவில் இருந்தார் என்பதை தான் சமூகம் குற்றமாக பார்க்கிறது. அப்படி பார்த்தால் யாருகும் விதிவிலக்கு கிடையாது. திருமணத்திற்கு முன்பே கூட எல்லோரும் ஏதாவது தொடர்பில் இருக்கின்றனர் என கூறியுள்ளார்.
Leave a Reply