
நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் முதலீடுகளை மேற்கொள்ள சர்வதேச தமிழ் முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் இடம்பெறும் ஆறாவது உலக தமிழர் வம்சாவளி கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் யுத்தத்தால் வடக்கு, கிழக்கு பாரியளவில் பாதிப்பை சந்தித்திருந்தது.
தற்போது யுத்தம் நிறைவடைந்த சூழலிலும் இதுவரை குறித்த பகுதிகள் அபிவிருத்தி செயற்பாடுகளில் பின்தங்கியுள்ளன.
இந்த நிலையில் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் குறித்த பகுதிகளின் அபிவிருத்தியையும் கருத்திற்கொண்டு சர்வதேச தமிழ் முதலீட்டாளர்கள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு முதலீடுகளை மேற்கொள்வதால் பெரும்பாலான இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புக்கள் ஏற்படும்.
இதேவேளை, எந்தவித விசாரணைகளும் இன்றி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.
ஆயிரம் நாட்களையும் கடந்து எந்தவித தீர்வும் இன்றி நீடிக்கும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு தகுந்த தீர்வு வழங்கப்பட வேண்டும்” என சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply