
இந்தியாவுடனான தோல்வியை தொடர்ந்து இலங்கையில் டி-20 அணித்தலைவர் பதவியில் இருந்து விலக தயார் என லசித் மலிங்கா பரபரப்பை கிளப்பியுள்ளார்.
2020ம் ஆண்டின் முதல் தொடராக இலங்கை அணி இந்தியாவுற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடியது.
முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், அடுத்து நடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றிப்பெற்று இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது.
இலங்கை அணி 2020ம் அண்டை தோல்வியுடன் தொடங்கியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்தியாவுடனான தொடருக்கு பிறகு அணித்தலைவர் பதவியலிருந்து விலக தயாராக இருப்பதாக மலிங்கா பரபரப்பை கிளப்பினார்.
இலங்கை அணி பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்க தவறிய அதே வேளையில், வலிமையான இந்திய அணிக்கு எதிராக பெரியதாக துடுப்பாட்டகாரர்கள் யாரும் ஜோடி சேர ஓட்டங்களை குவிக்க தவறிவிட்டனர் என்பதை மலிங்க ஏற்றுக்கொண்டார்.
நான் எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறேன், நான் பதவி விலக தயாராக இருக்கிறேன் என்று 36 வயதான மூத்த பந்து வீச்சாளரும், இலங்கை டி-20 அணித்தலைவருமான மலிங்கா தெரிவித்தார்.
மலிங்காவின் தலைமையின் கீழ், இலங்கை ஐ.சி.சி டி-20 தரவரிசையில் எட்டாவது இடத்தில் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply