
Niger நாட்டில் உள்ள இராணுவ தளங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 89 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Chinagodrar பகுதியில் உள்ள இராணுவ தளத்தில் சில தினங்களுக்கு முன்னர் தாக்குதல் நடந்தது.
இந்த தாக்குதலை இன்னொரு மேற்கு ஆப்பிரிக்க நாடான Mali -ஐ சேர்ந்த தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர்.
இதில் 89 Niger பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலங்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும் என அஞ்சப்படுகிறது.
இது குறித்து பேசிய இராணுவ அமைச்சர் Issoufou Katambe, வரும் ஞாயிறு அன்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடக்கும் போது கொல்லப்பட்டவர்களின் மொத்த விபரம் வெளியிடப்படும்.
ஆயுதம் ஏந்தும் தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக எங்கள் இராணுவம் தாக்குதலை தொடங்கும் என கூறினார்.
இத்தாக்குதலுக்கு எந்தவொரு இயக்கமும் இன்னும் பொறுப்பேற்கவில்லை.
இதனிடையில் இந்த தாக்குதல் நடந்த பகுதியில் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.
இதோடு தாக்குபவர்களை எதிர்த்து போராட போதுமான படைபலம் அரசாங்கத்திடம் இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Leave a Reply