
இலங்கையிலிருந்து 200 தேள்களை சீனாவுக்கு கடத்த முற்பட்ட சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சீன பிரஜை இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது குறித்த சந்தேகநபரின் பயணப்பொதியிலிருந்து தேள்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் உணவுத் தேவைக்காக விற்பனை செய்யும் நோக்குடன் குறித்த நபர் சீனாவுக்கு தேள்களை கடத்திச் செல்ல முற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்ததாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
Leave a Reply