
ஈராக்கில் பத்திரிக்கையாளரும், கமெராமேனும் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் சக பத்திரிக்கையாளர்கள் பயத்தில் உறைந்துள்ளனர்.
ஈராக்கின் Basra நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆயிரக்கணக்கானோர் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த பத்திரிக்கையாளர் Ahmen Abdel Samad மற்றும் கமெராமேன் Safaa Ghali ஆகியோர் போராட்ட களத்தை பதிவு செய்தபடி இருந்தனர்.
அப்போது காரில் இருந்த இருவரையும் நோக்கி மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடினான்.
இதில், Ahmen Abdel Samad சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் Safaa Ghali மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த விடயத்தை பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் உறுதி செய்துள்ளதோடு, படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், பேச்சு சுதந்திரம் பறிப்படுவதற்கு ஈராக் அரசு தான் பொறுப்பு, பத்திரிக்கையாளர்களை அவர்கள் தான் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து Ahmen Abdel Samad மற்றும் Safaa Ghali ஆகியோரின் சடலத்தை சவப்பெட்டியில் தூக்கி சென்று போராட்டகாரர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியதோடு, அவர்கள் மரணத்துக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையில் ஈராக்கில் உள்ள பத்திரிக்கையாளர்கள் Ahmen Abdel Samad மற்றும் Safaa Ghali ஆகியோர் கொல்லப்பட்ட பின்னர் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சுகிறார்கள்.

இது குறித்து Shihab Ahmed என்ற பத்திரிக்கையாளர் கூறுகையில், கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஈராக்கில் குறைந்தபட்சம் 5 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இது எங்களுக்கு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது.
இந்த கொலைகள் குறித்து முழுமையான விசாரணை முடிவடையும் வரை அனைத்து ஊடகவியலாளர்களும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடக பிரசாரத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம் என கூறியுள்ளார்.


Leave a Reply