
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்ள தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்து புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கிய முதல் வாரத்தில் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா நோக்கி சென்றுள்ளார்.
அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்வதனை அடிப்படையாக கொண்டே அவர் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அதற்மைய கடந்த 5 வருட காலமாக திரைக்கு பின்னால் இருந்து செயற்பட்ட பசில் மீண்டும் செயற்பாட்டு அரசியலில் களமிறங்கவுள்ளார்.
19ஆம் அரசியலமைப்பிற்கு அமைய இரட்டை குடியுரிமை கொண்ட நபர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது ஜனாதிபதி ஆவதற்கு தகுதியற்றவர் ஆவார்.
இதன் காரணமாக பசில் தனது அரசியல் பயணத்திற்காக அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
சமகால ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அமெரிக்க குடியரிமையை ரத்துச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply