
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுபயணம் செய்து 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
சுற்றுபயணமானது ஜனவரி 24ஆம் திகதி டி20 தொடருடன் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அணியில் புறக்கணிக்கப்பட்ட மகேந்திர சிங் டோனி இம்முறையும் அணியில் சேர்க்கப்படவில்லை.
இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்திய அணி விபரம் வருமாறு,
கோஹ்லி (அணித்தலைவர்), ரோகித் சர்மா (துணைத்தலைவர்), கே.எல் ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயால் அய்யர், மனீஷ் பாண்டே, ரிஷப் பாண்ட் (விக்கெட் கீப்பர்), ஷிவம் தூப், குல்தீப் யாதவ், சஹால், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தகூர்.
Leave a Reply