
பிரதேச செயலகங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள பௌத்த மதகுருமார்களுக்கு ஆசிரியர் தொழில் வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வாத்துவ, மொள்ளிகொட வஜிரகோன் மஹா விஹாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அமைச்சரவைக்கு ஆவணம் சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சரவை ஆவணத்திற்கு அமைச்சரவை சாதகமான தீர்மானமொன்றை எடுத்திருப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply