
மட்டக்களப்பு – வவுணதீவில் கர்ப்பிணி தாயொருவர் சுவசரிய நோயாளர் காவு வண்டியிலேயே குழந்தையை பிரசவித்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று முன் தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
கரடியனாறு, தும்பாலை எனும் கிராமத்தில் கர்ப்பிணி தாயொருவருக்கு பிரசவ வலியேற்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் வைத்தியசாலைக்கு செல்வதற்காக 1990 சுவசரிய நோயாளர் காவு வண்டி அழைக்கப்பட்டுள்ளது.
நோயாளர் காவு வண்டி, குறித்த பெண்ணை ஏற்றிக் கொண்டு சுமார் 50 மீற்றர் தூரம் செல்கையில் குழந்தை பிறந்துள்ளதாக தெரியவருகிறது.
இதன்பின் தாயும், குழந்தையும் ஆரோக்கியமாக கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply