
MCC உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமதாச தெரிவித்துள்ளார்.
கெஸ்பேவயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “MCC உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கு எதிர்க்கட்சி ஒருபோதும் இடமளிக்காது.
பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று கட்சி, எதிர்க்கட்சி பேதங்களின்றி ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து MCC உடன்படிக்கையை சிறுசிறு துண்டுகளாக கிழிப்பதற்கு தயார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற தயார். எமக்கிடையே எவ்வித பிரச்சினையும் இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply