
அணு உலையினால், ஆபத்து ஏற்பட உள்ளது என்று கனட மக்களுக்கு வந்த எச்சரிக்கை செய்தி பரபரப்பை கிளப்பிய பின், அது தவறுதலாக வந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய அணு உலை ஆலைகளில் ஒன்றான பிக்கரின் ஒன்றாரியாவில் அமைந்துள்ளது. அங்கு 14 மில்லியனுக்கு அதிகமான வீடுகள் உள்ளன.
இந்நிலையில், அங்கு வசிக்கும் மக்களுக்கு கடந்த 12ஆம் திகதி குறுந்தகவல் ஒன்று அலைப்பேசியில் வந்துள்ளது. அதை பார்த்து மக்கள் அதிர்ந்துள்ளனர்.
அதில் “தற்போது அவசரகாலமாக உள்ளது. 1 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்கவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அது 10 கிலோ மீற்றர் மக்களுக்கான செய்தி என்றாலும், ஒன்றாரியோவில் வசிக்கும் பல மக்களுக்க அந்த செய்து சென்றடைந்து இருந்தது.

தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குள், அந்த செய்தி தவறுதலால் அனுப்பப்பட்டது. மக்கள் மற்றும் சுற்றுசூழலுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒன்றாரியோவின் சொலிசிட்டர் ஜெனரல் சில்வியா ஜோன்ஸ் குறிப்பிடுகையில், அவசரகால மையத்தில் பயிற்சி வழங்கப்பட்ட போது தவறுதலாக இந்த செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு விசாரணை துவங்கியுள்ளது. இதுபோன்றவை நடக்காமல் இனி தடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply