
ஆப்கானிஸ்தானில் பெய்துவரும் பலத்த மழை மற்றும் பனியின் காரணமாக, இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதியில் கடுமையான மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதில் பல வீடுகள் சரிந்துள்ளன. மேலும் பல இடங்களில் கடுமையான பனி நிலவுகிறது. இதன் காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். 16பேர் காயடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக இடம் பெயர்ந்துள்ளனர்.
அத்தோடு, கடுமையான பனி பொழிவதால் நாட்டின் முக்கியச் வீதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கனமழை பொழியும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், உள்ளூர் அரசு வெள்ளப் பாதிப்பு குறித்து விவாதிக்க உடனடிக் கூட்டத்திற்கு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
Leave a Reply