சுமந்திரன் தலைவரானால் அதுவே தமிழர்களின் சாபக்கேடு

சுமந்திரன் தமிழ் மக்களின் தலைவராக வருவதாக இருந்தால் அது தமிழ் மக்களுக்கான சாபக்கேடாக அமையும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது இல்லத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தொடர்ச்சியாக தமிழ் மக்கள் பல்வேறுபட்ட இன்னல்களை எதிர்கொண்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தற்போது வந்துள்ள அரசாங்கம் என்பது தமிழ் மக்கள் கொஞ்சமாவது அனுபவித்து வந்த அற்பசொற்ப உரிமைகளைக் கூட இல்லாமல் செய்கின்ற போக்கினை தான் எங்களால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

ஐக்கிய தேசியக் தங்களைவிட கட்சிக்கு ஆதரவு வழங்கி கொண்டு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வருகின்ற பொதுத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழ் மக்கள் மீது பல்வேறு பொய்களை கூறி மக்களிடம் வாக்கு கேட்கும் ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே சம்பந்தன் அவர்கள்தான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ளார். மாவை சேனாதிராஜா அவர்களும் பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டார் என்கின்ற ஒரு கருத்தும் தற்போது பரவி வருகின்றது.

இவர்கள் தேசியப்பட்டியல் மூலம் உள்வாங்க படலாம் என்ற ஒரு கருத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் கூறப்பட்டு வருகின்றது,

தேர்தலில் போட்டியிடாமல் தலைவர்கள் தேசியப்பட்டியல் மூலம் வருவதற்கான காரணம் என்னவென்றால், மக்கள் அவர்களை நிராகரித்து விடுவார்கள் என்ற யோசனையில் அவர்கள் அவ்வாறான கருத்துக்களை முன்வைத்து வருவதனையும் எங்களால் காணக்கூடியதாக உள்ளது.

மாவை சேனாதிராஜா அவர்கள் ஒரு கருத்தினைக் கூறி வருகின்றார் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது போட்டியிடாமல் இருப்பது அது எனது சொந்த பிரச்சினை, அதனைப் பற்றி மற்றவர்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்று கூறுகின்றார். தமிழ் மக்கள் தற்பொழுது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கடந்த அரசாங்கத்திடமிருந்து எந்தவிதமான ஒரு தீர்வினை பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டது. மாறாக அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இதுவே அவர்களின் தவறான நோக்கமாகவும் இருந்தது. மாறாக கடந்த கால அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது தவிர அவர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் பெற்றுக் கொணடு முடிந்திருக்கவில்லை.

மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் போன்றவர்கள் எடுத்த தவறான முடிவுகளே தமிழ் மக்களை இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *